Skip to main content

Featured

Chocolate Biscuit Cake (No Oven Recipe)

             Chocolate Biscuit Cake (No Oven Recipe)   Why this recipe? Oven வேண்டாம்  10–15 mins easy Kids favourite  Budget friendly  Ingredients: Marie biscuits – 2 packets Milk – 1 cup Sugar – 2 tbsp Cocoa powder – 2 tbsp Butter – 2 tbsp Eno – ½ tsp   Preparation Steps: Biscuit crush பண்ணுங்க Biscuits-ஐ powder மாதிரி grind பண்ணுங்க Mix ready பண்ணுங்க Milk + sugar + cocoa powder சேர்த்து mix பண்ணுங்க Combine Biscuit powder + mix சேர்த்து batter ready பண்ணுங்க Final step Butter + Eno சேர்த்து mix பண்ணுங்க Cook Tawa method: Low flame 30 mins cover பண்ணி cook Cooker: 25–30 mins (whistle இல்லாம)

காரா கிச்சடி (South Indian Masala Khichdi Recipe)

       காரா கிச்சடி (South Indian Masala Khichdi Recipe)

 
தேவையான பொருட்கள்:
  • அரிசி – 1 கப்
  • பாசிப்பருப்பு – ½ கப்
  • வெங்காயம் – 1 (நறுக்கியது)
  • தக்காளி – 2 (நறுக்கியது)
  • பச்சைமிளகாய் – 2 (நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு விழுது – 1 tsp
  • மஞ்சள் தூள் – ½ tsp
  • மிளகாய் தூள் – 1 tsp
  • மல்லி தூள் – 1 tsp
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் / நெய் – 2 tbsp
  • கடுகு – ½ tsp
  • சீரகம் – ½ tsp
  • கருவேப்பிலை – சில
  • கொத்தமல்லி – அலங்கரிக்க
செய்வது எப்படி:
  • அரிசியும் பாசிப்பருப்பும் சேர்த்து நன்றாக கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
  • குக்கரில் எண்ணெய் / நெய் சேர்த்து கடுகு, சீரகம், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  • வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பிறகு இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி சேர்த்து மசாலா தூள்கள் அனைத்தும் போட்டு நன்கு வதக்கவும்.
  • ஊறவைத்த அரிசி, பருப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • 3 கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து கிளறவும்.
  • குக்கரில் 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
  • வெந்த பிறகு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பரிமாறும் விதம்:
  •  இந்த காரா கிச்சடி-யை ராய்த்தா, ஊருகாய் அல்லது பப்படம் உடன் சூடாக சாப்பிட்டால் ரொம்ப சுவையாக இருக்கும்

Comments

Popular Posts